இம்ரான் கான் பாக்கிஸ்தான் நாட்டிற்கு மலிவான எரிவாயு மற்றும் கோதுமையை ரஷ்யாவிடமிருந்து உறுதி செய்திருக்க முடியும் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களுடன் காணொலி வாயிலாக உரையாற்றியுள்ளார். அப்போது அதில் அவர் கூறியிருப்பதாவது, பாகிஸ்தானின் வெளியுறவு கொள்கை அதன் சொந்த நலன்களுக்காக உருவாக்கப்பட வேண்டும். மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கையை மட்டுமே நான் விரும்புகின்றேன்.
வேறு எந்த நாட்டின் வெளியுறவு கொள்கைக்காகவும் நமது நாட்டை பலியிட கூடாது. மேலும் நாங்கள் ரஷ்யாவிலிருந்து மலிவான எரிவாயு மற்றும் கோதுமையை விரும்புகின்றோம். மாஸ்கோ எரிவாயு மற்றும் கோதுமையை 30 சதவிகிதம் குறைந்த விலையில் வழங்க ஒப்புக் கொண்டிருக்கின்றது. மேலும் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை மேற்கொண்டிருந்தால் நமது நாட்டிற்கு தேவையான எரிவாயு மற்றும் கோதுமையை ரஷ்யாவிடமிருந்து உறுதி செய்திருக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் எனக்கு நல்ல உறவு இருந்தது. ஆனால் அது மற்றவர்களை தங்கள் கட்டளைகளை பின்பற்றும் படி கட்டாயப்படுத்த அமெரிக்கர்கள் விரும்புகின்றனர்.இந்நிலையில் நமது ஆட்சியாளர்களின் ஒருவரான பர்வேஸ் முஷாரப்புக்கு விடுக்கப்பட்டிருந்த ஒரு மிரட்டல் அழைப்பிற்கு பின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இணைந்துள்ளார். பயங்கரவாதம் மீதான போருக்கும் எங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை.
மேலும் அமெரிக்காவில் ராணுவ தளங்களை வழங்க நான் நிராகரித்த பின்னரே அனைத்து பிரச்சினைகளும் தொடங்கப்பட்டது. பாகிஸ்தானில் மிர்சாபர் மற்றும் ஷாகித் போன்றோர் நமது அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்காவிற்கு உதவி வருகின்றனர். எனது தலைமையிலான பிடிஐ அரசாங்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலை தற்போது புதிய சாதனை அளவை தொட்டு வருகிறது.
மேலும் வெளிநாடுகளில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கு கடிதம் எழுத வேண்டும். சமூக ஊடக பிரச்சாரங்களை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாட்டில் உள்ள பாகிஸ்தானியர்கள் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெளிநாட்டு சதிக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக இம்ரான்கான் பாராட்டும் தெரிவித்துள்ளார்.