Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுடன் இணையும் உக்ரைன் பகுதிகள்… “செப்டம்பர் 30 புதின் அறிவிப்பு”…? பிரிட்டன் உளவுத்துறையினர் அச்சம்…!!!!!

உக்ரைனில் தங்கள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை தங்களுடன் இணைத்துக் கொள்வதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் வெள்ளிக்கிழமை வெளியிடுவார் என பிரிட்டன் உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இது பற்றி பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ரஷ்யாவுடன் தங்கள் பகுதிகளை இணைப்பது தொடர்பாக ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சர்ச்சைக்குரிய பொது வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்துள்ளது. இந்த சூழலில் ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் புதின் வரும் வெள்ளிக்கிழமை உரையாற்றிய இருக்கின்றார்.

அந்த உரையின் போது தங்களால் அண்மையில் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளை ரஷ்யா உடன் இணைத்துக் கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதின் வெளியிடுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது. மேலும் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்னும் பெயரில் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கின்ற தாக்குதலில் தற்போது அந்த நாடு கண்டு வரும் பின்னடைவு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் தாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்வதாக புதின் அறிவிப்பது பொதுமக்களிடையே அவருக்கான ஆதரவை மீண்டும் அதிகரிக்கும் என அதிகாரிகள் கருதுகின்றார்கள். எனவே நாடாளுமன்ற உரையின் போது ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளை இணைத்துக் கொள்வதற்கான அறிவிப்பை புதின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் வருடம் ஆட்சி செலுத்தி வந்த அதிபர் விக்டர் யானு கோவிச்சிக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனை அடுத்து அவரது ஆட்சி கவிழ்ந்துள்ளது. அதனை தொடர்ந்து கிழக்கு ட்ரைனிங் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அரசு படையினருக்கு எதிராக சண்டையிட்டு கணிசமான பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். அப்போது ரஷ்யாவும் கிரிமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளது. அதற்கு முன்னதாக ரஷ்யா இணைப்பது பற்றி பொதுமக்களின் கருத்தை கேட்பதற்காக பொதுவாக எடுப்பு நடத்தப்பட்டுள்ளது எனினும் அதனை அந்த பகுதியை சேர்ந்த உக்ரைன் ஆதரவாளர்கள் புறக்கணித்துள்ளனர்.

இருப்பினும் பொது வாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்காளர்கள் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனை அடிப்படையாகக் கொண்டு கிரிமீயா தீபகற்பத்தை ரஷ்யா தன்னுடன் நினைத்துக் கொண்டுள்ளது. எனினும் அந்த பொது வாக்கெடுப்பு போலியானது என அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி கிரிமியா இணைப்பை  நிராகரித்துள்ளது. இந்த சூழலில் நோட்டா அமைப்பில் இனைவதற்கு உக்ரைன் எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி படையெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக டொனாட்ஸ், லுஹான்ஸ்க் மாகாணங்களை  டான்பாஸ் பிராந்தியத்தில் இன்னும் அரசு படையினர் வசம் இருக்கும் பகுதிகளை கைப்பற்றுவதற்கான கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து ரசிகர்கள் சண்டையிட்டு முன்னேறி வருகின்றார்கள்.

மேலும் கிரிமியா தீபகற்பத்திற்கும் டான்பாஸ் பிராந்தியத்திற்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக இடைப்பட்ட பகுதிகளையும் ரஷ்யபடையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த சூழலில் ரஷ்யாவுடன் இணைவது தொடர்பான பொது வாக்கெடுப்பு அந்த நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளான லுஹான்ஸ்க், கெர்சான் மற்றும் டொனால்ட் ஸ்கில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்துள்ளது. ரஷ்யாவுடன் இணைய விருப்பமா என்னும் கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என பதிலை தேர்ந்தெடுப்பதற்கான இந்த பொது வாக்கெடுப்பில் ரஷ்யாவிற்கு ஆதரவாக தான் முடிவுகள் வெளியாகும் என மேற்கத்திய நாடுகள் விமர்சனம் செய்து வருகிறது. அதே போல் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து 97 சதவீதம் பேர் வாக்களித்திருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆற்ற இருக்கும் உரையில் உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்து கொள்வதற்கான அறிவிப்பை புதன் வெளியிடுவார் என்று தற்போது பிரிட்டன் உளவுத்துறை அமைச்சர் அச்சம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |