Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுடன் கைகோர்த்த அமெரிக்கா…. விண்வெளி ஆராய்ச்சிக்காக புதிய ஒப்பந்தம்…. வெளியான முக்கிய தகவல்…!!

பிரபல நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் புதிய ஒப்பந்தத்தில் கையழுத்திட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று ரஷ்யாவில் ரோஸ் கோஸ் மாஸ் விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த 2 விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி விண்வெளி விமானங்களை பகிர்ந்து கொள்வதற்கான திட்டத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது ரஷ்யா மற்றும் உக்ரைன் போரின் காரணமாக முடங்கி கிடந்த நிலையில், தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால், முதல் ஒருங்கிணைந்த விண்கலம் செப்டம்பர் மாதத்தில் அனுப்பப்படும். அதன் பிறகு புதிய ஒப்பந்தத்தின் படி அமெரிக்க வீரர்கள் ரஷ்ய விண்கலத்திலும், ரஷ்ய வீரர்கள் அமெரிக்க விண்கலத்திலும் பயணம் செய்யலாம். மேலும் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே அமைதியான முறையில் விண்ணை ஆய்வு செய்வதற்காக மட்டுமே புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ரஷ்ய விண்வெளி நிலையத்தில் ஒரு அமெரிக்க வீரர் இருப்பதும், அமெரிக்க விண்வெளி நிலையத்தில் ஒரு ரஷ்ய வீரர் இருப்பதும் அவசியமாகும் என‌ அமெரிக்க விண்வெளி மையம் கூறியுள்ளது.

Categories

Tech |