உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுத்தது. இதனை தொடர்ந்து ரஷ்யா மீது அதிருப்தி அடைந்த பல நாடுகள் அதன் மீது பொருளாதார தடையை விதித்தன. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யா தனக்கு ஆதரவாக இருக்கும் ஒரு சில நாடுகளை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு முக்கிய பகுதியாக ரஷ்ய அதிபர் புதின் பாகிஸ்தானின் புதிய அதிபராக பதவி ஏற்றிருக்கும் ஷேபாஸ் ஷெரீப்புக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் விரும்புவதாக அவர் கூறியுள்ளார். ஏற்கனவே ரஷ்யாவும் பாகிஸ்தானும் நெருக்கமான நண்பர்களாக இருந்த நிலையில் பாகிஸ்தான் திடீரென அமெரிக்கா பக்கம் சாய்ந்தது.
இதனையடுத்து ரஷ்யாவும் சீனாவை நோக்கி நகரத் தொடங்கியது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான இடைவெளி சற்று அதிகமாகவே தற்போது மீண்டும் உறவை புதுப்பித்துக் கொள்ள ரஷ்ய அதிபர் புதின் திட்டமிடுவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக முக்கிய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெரீப் பதவி ஏற்பதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தான் புதின் கடிதம் எழுதி இருப்பதாகவும் இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.