Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை”…. உக்ரேன் அதிகாரி படுகொலை…. பின்னணியில் யார்…? கட்டவிழ்க்கப்படுமா மர்மம்….!!

ரஷ்யாவுடன் போர் விவகாரம் தொடர்பாக சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உக்ரைன் அதிகாரி ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் ஏவுகணை விச்சு, வான் மற்றும் தரைவழித் தாக்குதல் போன்றவற்றை நடத்தி வருகிறது. இவ்வாறு இருக்க இரு நாடுகளுக்கிடையேயான சமரச பேச்சுவார்த்தையும் 2 கட்டங்களை கடந்துள்ளது.

இதில் எந்தவித பயணம் கிடைக்காததால் 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை வருகின்ற திங்கள்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யாவுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உக்ரைன் அதிகாரியான டெனிஸ் கிரீவ் என்பவர் அந்நாட்டின் தலைநகரிலுள்ள கோர்ட்டில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரை யார் கொலை செய்தார்கள் என்பது தொடர்புடைய தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

Categories

Tech |