Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை அச்சுறுத்தும் கொரோனா… 16 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை…!!!

ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை எட்டியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது 215 நாடுகளுக்கும் மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை எட்டியுள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,42,106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் ஒரே நாளில் 110 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 16,099 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 7.55 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |