ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை எட்டியுள்ளது. மேலும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது.
இந்த நிலையில் ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,729 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,00,048 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமன்றி கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 123 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,299 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.