இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்23,932420 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு வருகிற 30-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் அமலுக்கு வந்துள்ள நிலையில் தினந்தோறும் கொரோனா எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் கொரானாவின் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 97 ஆயிரத்து 836 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 162 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் வீடு திரும்பிய வர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 24 ஆயிரத்து 891ஆக உள்ளது. 24 மணி நேரத்தில் 420 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 19 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தில் உள்ளது.
நிலையில் இப்பொழுது இந்தியா ரஷ்யாவை நெருங்கிக் கொண்டிருக்கிறது இந்தக் கொரோனா தொற்று சீனாவில் தொடங்கி உலகமெங்கும் பரவத் தொடங்கிய நிலையில் சர்வதேச நிலையில் ஒரு கோடியே 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
கொரோனா அதிகம் தாக்கம் உள்ள நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.அந்நாட்டில் 29 லட்சத்து 82 ஆயிரத்து 928 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் பிரேசில் உள்ளது. இங்கு 16 லட்சத்து 4 ஆயிரத்து 585 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்காம் இடத்தில இருக்கும் ரஷ்யாவில் 6 லட்சத்து 81 ஆயிரத்து 251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.