Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவை” விட்டு எல்லாரும் வெளியேறுங்க…. பிரபல நாட்டின் அதிரடி உத்தரவு….!!

ரஷ்யாவின் மீது பிரான்ஸ் பொருளாதார தடையை விதித்ததோடு மட்டுமின்றி அந்நாட்டிலிருக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் ஏவுகணை விச்சு, வான் மற்றும் தரைவழித் தாக்குதல் போன்றவற்றை நடத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்ய படைகள் உக்ரேனின் தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற நகரங்களை கைப்பற்றுவதற்காக தொடர்ந்து முன்னேறி வருகிறது.

இந்த செயலினால் ரஷ்யாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் நாடும் ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்ததோடு மட்டுமின்றி தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேறும் படியும் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |