அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ரஷ்யாவால் பிடிபட்டுள்ள அமெரிக்கர்களை விடுவிக்க கோரி ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினேன். இந்த பேச்சு வார்த்தை 25 நிமிடங்கள் வரை நீடித்தது. அதனை தொடர்ந்து வெளிப்படையாக மற்றும் நேரடியாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கர்கள் பால் வீலன் மற்றும் பிரிட்னி கிரினர் இருவரையும் விடுவிப்பதற்கு அமெரிக்காவில் உள்ள ரஷ்யர்களை விடுவிப்பது என்ற பெரிய அளவிலான சிறை கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி அழுத்தம் கொடுத்து உள்ளோம். இந்த பேச்சுவார்த்தையில் கருங்கடல் வழியே பாதுகாப்புடன் தானிய ஏற்றுமதி நடத்துவதற்கான ஒப்பந்தமும் வெகு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். ஏனென்றால் இந்நடவடிக்கையை எதிர்பார்த்து இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதனை போல ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த விவரங்கள் இருதரப்பிலும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அமெரிக்க விதித்துள்ள பொருளாதார தடைகள், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளன. ரஷ்ய உணவு விநியோகத்திற்கான முறையான விதிவிலக்கிற்கு அமெரிக்க அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று லாவ்ராவ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சிறை கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள விவகாரத்தில் ஊடகங்களுக்கு யூக செய்திகளை வெளியிடுவதற்கு ஏற்ற வகையில் இல்லாமல், அமைதியான தூதராக வழியேயான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா திரும்ப வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி உள்ளது. இதனைத் தவிர உக்ரைனின் போரில் ரஷ்யாவின் இலக்குகள் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று பிளிங்கனிடம் கூறப்பட்டு உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உக்ரைனின் பல பகுதிகளை தொடர்ந்து இணைத்துக் கொள்ளும் ரஷ்யாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் அங்கீகரிக்காது. மேலும் இந்த திட்டத்தில் தொடர்ந்து ரஷ்யா ஈடுபட்டால் கூடுதல் தடைகள் விதிக்கப்பட கூடும் என்று லாராவுக்கு பிளிங்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.