Categories
உலக செய்திகள்

“ரஷ்யா இதை செய்தால்?”…. பேரழிவு நிச்சயம்!…. அமெரிக்க அதிபர் பகிரங்க எச்சரிக்கை….!!!!

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா-உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். அதாவது உக்ரைன் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு ரஷ்யா தான் முழு பொறுப்பு. ஒருவேளை ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால் அதற்கு தக்க பதிலடியாக ரஷ்யா பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும்.

மேலும் எங்களின் கூட்டாளிகள் ரஷ்யாவிற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த தயாராக இருக்கின்றனர். அதோடு மட்டுமில்லாமல் கிட்டதட்ட 600 மில்லியன் மதிப்பிலான அதிநவீன அணு ஆயுதங்களும் உக்ரைன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழைய முயற்சித்தால் மனித உயிரிழப்புகளையும், கடுமையான விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |