Categories
உலக செய்திகள்

“ரஷ்யா இனப் படுகொலை செய்கிறது…!!” உக்ரைன் அதிபர் பகிரங்க குற்றச்சாட்டு…!!

உக்ரைனின் கீவ் நகர புதைகுழிகளில் இருந்து 400 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைன் மக்களை கொடூரமான முறையில் கொலை செய்து குழிகளில் புதைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, உக்ரைன் நகரில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இனத்தை சேர்ந்த மக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அளிக்கப்பட்டு வருகின்றனர். ரஷ்யாவின் கொள்கைக்கு நாங்கள் உடன்படாத ஒரே காரணத்திற்காக அவர்கள் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறி எங்கள் மக்களை கொன்று குவிக்கின்றனர்.

இவ்வாறான கூட்டுப்படுகொலை 21 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்துகொண்டிருக்கிறது. இதனை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இது ஒவ்வொரு நாட்டுக்கும் பாடம்தான். இங்கு தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நான் ரஷ்ய அதிபரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்த முடியாது. எனவே முதலில் போரை நிறுத்தச் சொல்லுங்கள் அதன் பின்னர் நான் பேச்சுவார்த்தை நடத்துகிறேன். இந்தப் படுகொலைக்கு ரஷ்யாவிற்க்கு என்ன தண்டனை என தெரியவில்லை. ஆனால் இரண்டு குழந்தைகளின் தந்தையாக அதிபராகவும் நான் மிகவும் மன உளைச்சலில் உள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |