ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தீவிரமாக நடந்து வருகிறது.
அமெரிக்கா பல சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. இந்த தகவலை உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெக்ஸினோவ் தெரிவித்துள்ளார். இவர் ஏவுகணைகளை தந்ததற்காக அமெரிக்காவுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். கடந்த 4 மாதங்களாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில் உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள டோனெட்ஸ்க் நகரில் மக்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கவர்னர் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா பல சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. இந்த ஆயுதங்கள் மூலம் ரஷ்ய படைகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ரஷ்யப் படைகள் உக்ரைனில் உள்ள பல முக்கியமான இடங்களின் மீது தாக்குதல் நடத்தி வருவதால் ஏராளமான மக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்பிறகு கார்கிவில் பகுதியை சேர்ந்த ஒரு குழந்தை உட்பட 15 பேர் இறந்ததாக தெரியவந்துள்ளது. தற்போது ரஷ்யா கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த பகுதியில் ரஷ்யா ஏராளமான வீரர்களைக் குவித்து வரும் நிலையில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.