Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துங்கள்… அமைதி ஊர்வலம் நடத்திய கிறிஸ்தவர்கள்..!!

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினார்கள்.

ரஷ்யா- உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக அங்கு படிக்கின்ற குழந்தைகள், வேலை பார்க்கின்ற இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் உணவு தண்ணீர் இன்றி பெரும் அவதிப்படுகின்றனர். மேலும் கடும் குளிரில் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் ஏராளமான மக்கள் உக்ரைன் விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே அங்கு இருக்கின்ற அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பலர் இறந்து வருகின்றனர். இந்தப் போரை நிறுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்தப் போரை நிறுத்த நீலகிரி மாவட்டம்  குன்னூர் ஆழ்வார்பேட்டையில் இருக்கின்ற புனித ஜோசப் ஆலயத்தின்  மக்கள் அமைதி ஊர்வலம் நடத்தினார்கள். இந்த ஊர்வலம் சிம்ஸ் பூங்காவில் ஆரம்பித்து பெட்போர்டு சர்ச்சில் முடிவடைந்தது. இதில்  ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கையில் சமாதானத்தை கொடுக்க போரை நிறுத்து, வெறுப்பை விளக்கு, அன்பை விதை, உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய கொண்டு  ஊர்வலம் சென்றனர்.

Categories

Tech |