ரஷ்ய அதிபருக்கு நேட்டோ தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ஐரோப்பாவில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இது தொடர்பாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் ரஷ்யா ஒரு போதும் உக்ரைனை ஜெயிக்காது என்று கூறியுள்ளார். அதன் பிறகு ரஷ்யாவின் திட்டத்தை முறியடிப்பதற்காக உக்ரைன் நாட்டிற்கு நேட்டோ அமைப்பு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகள் வழங்கும்.
இதனையடுத்து ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் மற்றொரு நாட்டிற்கு பரவுவதை நேட்டோ அமைப்பு தடுக்க வேண்டும். இதைத்தொடர்ந்து உக்ரைன், ஜார்ஜியா, மால்டோவா போன்ற நாடுகளை ரஷ்யா சீண்டியது போல் நேட்டோ உறுப்பு நாடுகளை சீண்டினால் நேட்டோ அமைப்பு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. மேலும் ரஷ்யா தற்போது உக்ரைன் மீது மட்டும் தாக்குதலை நடத்தவில்லை எனவும் 40 மில்லியன் மக்கள் வாழும் ஜனநாயக நாட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது எனவும் கூறியுள்ளார்.