உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்திக் கொள்ள புதின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்ததோடு, பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. இதன் காரணமாக அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இருப்பினும் புதின் உக்ரைன் மீதான போரை தொடர்ந்தார். இதன் காரணமாக ரஷ்யாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு ஏராளமான மக்கள் வேலை இழந்து தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யாவில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் வெளியேறியுள்ளது. இதனால் பல மில்லியன் டாலர் இழப்பீடுகளை ரஷ்யா சந்தித்துள்ளதாகவும், நடப்பாண்டு முடிவதற்குள் 9.3% மக்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மென்பொருள் உற்பத்தி, எண்ணெய் மற்றும் எரிபொருள் மூலம் கிடைக்கும் வருமானங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக பல்வேறு துறைகளில் உள்ள செலவினங்களை கட்டுப்படுத்தும் நிலைக்கு புதின் தள்ளப்பட்டுள்ளார். இங்கு பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தேசிய கையிருப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் ரஷ்யாவின் மத்திய வங்கியில் உள்ள பாதி கையிருப்புகள் உகரைன் நட்பு நாடுகளால் முடக்கப்பட்டுள்ளதால், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக போரை நிறுத்திக் கொள்ள புதின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.