உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். ரஷ்யாவின் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் உக்ரைன் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் முற்றிலுமாக நாசமாகி கிடந்தது. அதனை உக்ரைன் இளைஞர்கள் உருக்குலைந்த தங்களின் கிராமங்களை மீண்டும் கட்டி எழுப்பி புதிய யுக்தியை கையாண்டனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறிப்பிட்ட பகுதிகளில் உக்கிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் போர் மண்டலங்களில் சிக்கியுள்ளதுடன் வெளியேறவும் மறுத்து வருகின்றனர். ஆனால் அந்த மக்களை உடனடியாக வெளியேற்றப்பட வேண்டிய நடைவடிக்கைகள் துரிதப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியது, அதிக எண்ணிக்கையிலான மக்கள் வெளியேற்றினால் மட்டுமே ரஷ்ய படைகளின் கைகளில் சிக்காமல் இருப்பீர்கள். குடும்பங்கள் என்றால் அவர்களுக்கு விளக்க வேண்டும். அதனை தொடர்ந்து கட்டாயமாக டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அப்பகுதி மக்களின் முடிவு மட்டுமே தெரிய வேண்டும். இதுவரை முடிவெடுக்காதவர்கள் விரைவாக முடிவெடுங்கள், உங்களுக்கான அனைத்து உதவிகளும் அரசு முன்னெடுக்கும். இதனையடுத்து நாம் ரஷ்யா அல்ல. அதனால் தான் ஒவ்வொரு உயிரும் நமக்கும் முக்கியம். முடிந்தவரை பல உயிர்களை காப்பாற்றும் ரஷ்யர்களின் பயங்கரவாதத்தை முடிந்தவரை கட்டுப்படுத்தவும், கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.