Categories
தேசிய செய்திகள்

ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலி…. தங்கத்தில் தஞ்சமடையும் முதலீட்டாளர்கள்…..!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்-வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய படைகளை மறிப்பவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தவும் ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. எரிபொருள் விலையேற்றம், வர்த்தகத்தில் ஏற்படக்கூடிய சரிவு ஆகியவையே இதற்குக் காரணமாகும். இதன் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூபாய் 864 உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது..

Categories

Tech |