பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறது. இந்த அமைப்பின் வர்த்தக மன்ற கூட்டமானது காணொலிக் காட்சி மூலமாக நடக்கிறது. இதை சீனா ஏற்று நடத்துகிறது. இதில் சீன அதிபர் ஜின்பிங் தொடக்க உரையாற்றினார். அவர் கூறியதாவது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால், அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். இந்நிலையில் பொருளாதார தடை என்பது இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பானவை என்று கூறினார்.
இதனையடுத்து சர்வதேச பொருளாதாரம் அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்த விரும்புபவர்கள், பொருளாதாரத்தை அரசியலாக்குபவர்கள், பொருளாதார தடையை விதிப்பவர்கள் போன்றவர்கள் இறுதியில் தங்களுக்கும் தீங்கு விளைவிப்பார்கள் என்றும், இவர்கள் உலக மக்களுக்கும் தீங்கு விளைவிப்பார்கள் என்று கூறினார். மேலும் சர்வதேச மேலாதிக்கம் மற்றும் குழு அரசியல் போன்றவைகள் ஒற்றுமையை ஏற்படுத்தாமல் மாறாக போர் மற்றும் மோதலை மட்டுமே ஏற்படுத்துகிறது என்று கூறினார். இதில் ரஷ்ய அதிபர் புதின், பிரேசில் பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோரும் பேசுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.