ரஷ்யாவிற்கு எதிரான பதாகையுடன் ரஷ்ய தொலைக்காட்சியில் நேரலையில் தோன்றிய பெண்.
போரை நிறுத்துங்கள், ரஷ்ய அரசு கூறுவதை நம்பாதீர்கள், அவர்கள் பொய் சொல்கிறார்கள்’ என்று எழுதப்பட்ட பதாகையுடன் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில், கடந்த மாதம், நேரலையில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது, செய்தி வாசிப்பவரின் பின்னால் தோன்றினார் அத்தொலைக்காட்சியின் எடிட்டர் Marina Ovsyannikova (43). அதனை தொடர்ந்து 14 மணி நேரம் விசாரணை செய்த பிறகு 30,000 ரூபிள்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனை அறிந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உதவிக்கரம் நீட்டியும் அதனை மறுத்துள்ள அவர் மெசியாவின் விட்டு வெளியேறும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது Die Welt எனும் ஜேர்மன் செய்தித்தாளுக்கு ப்ரீலான்சராக பணி செய்யும் அவர் உக்ரைன், ரஷ்யா முதலான நாடுகளிலிருந்து செய்திகளை வழங்க இருப்பதாகவும், ஒரு ஊடகவியலாளராக இது எனக்கு அளிக்கப்பட்டுள்ள இலக்கு, நான் இந்த சுதந்திரத்திற்கு ஆதரவாக நிற்பேன் என்று கூறியுள்ளார், Marina Ovsyannikova.