Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும்…. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு….!!

ரஷ்யாவை கண்டித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுனில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது புரட்சி கழக தலைவர் சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக  நிறுத்தி உக்ரேனில் இருந்து நிரந்தரமாக ரஷ்யா  வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |