Categories
உலக செய்திகள்

ரஷ்யா: “எங்களை யாராலும் தனிமைப்படுத்த முடியாது”…. உறுதிபட சொன்ன புதின்…..!!!!!

ரஷ்யாவை எந்தஒரு சக்தி வாய்ந்த நாட்டாலும் தனிமைப்படுத்த இயலாது என அந்நாட்டு அதிபரான புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கிழக்குப் பகுதியிலுள்ள வேஸ்டாக்னி விண்வெளி ஏவுதள மையத்துக்கு சென்ற புதின், பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது “ரஷியாவை உலகின் எந்த சக்தியாலும் தனிமைப்படுத்தவே முடியாது.

தற்போதைய சூழலில் யாரையும் எந்த ஒரு நாடும் தனிமைப்படுத்துவது என்பது நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்று ஆகும். அதிலும் குறிப்பாக ரஷ்யா ஆகிய மிகப் பெரியநாட்டை யாராலும் தனிமைப்படுத்த முடியாது. தங்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட விரும்பும் எங்களது நட்பு நாடுகளுடன் நாங்கள் பணிபுரிவோம்” என்று கூறினார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடுத்த ஆக்ரோஷமான போர் நீடித்து வருகிறது. இதில் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவிற்கு எதிராக பல பொருளாதார தடைகளை உலக நாடுகள் பலவும் விதித்து வரும் சூழ்நிலையில், புதின் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார். அவ்வாறு உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கிய பிறகு, தலைநகர் மாஸ்கோவிற்கு வெளியே புதின் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இது என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |