உக்ரைனில் நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதல் இலக்கை ரஷ்ய உளவாளி ஒருவர் படம் பிடித்துள்ளார்.
ரஷ்யா- உக்ரைன் தாக்குதலானது கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் உள்ள லிவிவ் நகரம் நேற்று முன்தினம் நடந்த ரஷ்யாவின் 2 ராக்கெட் தாக்குதலால் அதிர்ந்து போயுள்ளது. இதையடுத்து ஒரு ராக்கெட் பறந்து வந்து தாக்குவதை, ரஷ்ய உளவாளி படம் பிடித்ததாக உள்ளூர் போலீசார், சந்தேகப்படும் ஒருவரை பிடித்துள்ளனர்.
மேலும் இதுபற்றி அந்த மாகாண கவர்னர் மேக்சிம் கோசிட்ஸ்கி கூறுகையில், பிடிபட்ட அந்த நபர், ரஷிய நடத்திய ராக்கெட் தாக்குதல் இலக்கை படம் பிடித்துள்ளார். மேலும், இந்த பிராந்தியத்தில் உள்ள சோதனைச் சாவடிகளையும் அவரது செல்போனில் படம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்தப் படங்களை, ரஷிய செல்போன் எண்களுக்கு அந்த நபர் அனுப்பி வைத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.