ரஷ்யா ஏற்கனவே ஸ்புட்னிக்வி என்ற தடுப்பூசியை தயாரித்திருந்த நிலையில் தற்போது ஸ்புட்னிக் லைட் என்ற தடுப்பூசியை இரண்டாவதாக தயாரித்திருக்கிறது.
உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. இதில் கடுமையாக பாதிப்படைந்த நாடுகள் பிற நாடுகளின் உதவியை நாடியுள்ளன. இதன்படி கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்த பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் லைட் என்ற தடுப்பூசிக்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது தற்போது வரை கொரோனாவிற்கு எதிராக செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளுக்கும் 2 டோஸ்கள் உண்டு. ஆனால் ஸ்புட்னிக் லைட் மட்டும் தான் ஒரு டோஸ் மட்டும் செலுத்தப்படக்கூடிய தடுப்பூசி என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
இத்தடுப்பூசி குறித்து அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளதாவது, கொரோனோவிற்கு எதிராக பயனளிக்கக்கூடிய ஸ்புட்னிக் லைட் என்ற தடுப்பூசி ஏகே-47 துப்பாக்கிகளை போன்று நம்பகத் தன்மை உடையது. அனைத்து உருமாற்றம் அடைந்த கொரோனாவின் வகைகளையும் எதிர்த்து சிறப்பான பலனை அளிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.