Categories
உலக செய்திகள்

ரஷ்யா: “கூடுதல் கல்வி கட்டணம் வேண்டாம்”…. இந்திய மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு….!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக அந்நாடு உருக்குலைந்து வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் அண்டைநாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இதேபோன்று  உக்ரைன் நாட்டின் உயர் கல்விநிறுவனங்களில் படித்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுமாணவர்களும் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். அந்த அடிப்படையில் உக்ரைனில் மருத்துவம், பொறியியல் ஆகிய உயர்படிப்பு பயின்று வந்த சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இதில் ஏராளமானோர் மருத்துவ மாணவர்கள் ஆவர்.

உக்ரைனில் இதுவரை போர் முடிவுக்கு வராததால் நாடு திரும்பிய மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆகவே அவர்கள் படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் போர் காரணமாக படிப்பை பாதியில் விட்டு நாடு திரும்பிய இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்களை தங்களது நாட்டில் படிப்பை தொடர வைக்க ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது.
இதற்காக இந்திய மாணவர்கள் மற்றும் குறிப்பாக மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்களை ரஷ்யா, கிரீமியாவில் உள்ள ரஷ்ய பல்கலைக்கழங்கள் அணுகியுள்ளது. கூடுதல் கட்டணம் இன்றியும் , நுழைவுத் தேர்வு இன்றியும் தங்கள் பல்கலைக்கழகங்களில் இந்த மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று ரஷ்ய பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளது. ரஷ்யா அறிவித்துள்ள இந்த உதவியை முன்பே கஜகஸ்தான், ஜார்ஜியா, அர்மீனியா, பெலாரஸ், போலந்து ஆகிய நாடுகளும் வழங்க முன்வந்திருந்தது கவனிக்கத்தக்கது.
மற்றொரு புறம் உக்ரைனில் போர் தொடங்கியதும் அங்கிருந்து நாடு திரும்ப விரும்பாத இந்திய மாணவர்கள் சிலர் நேரடியாக மால்டோவா சென்று அங்குள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வியை தொடர்வது தற்போது தெரியவந்துள்ளது. இதுவரையிலும் சுமார் 140 மாணவர்கள் அந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து இருப்பதாக பேராசிரியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |