Categories
உலக செய்திகள்

ரஷ்யா சரமாரியான ஏவுகணை வீச்சு… 10 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏவுகணை வீச்சில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நோட்டா ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. ராணுவ நிலைகளை மட்டுமே குறி வைப்பதாக கூறி போரை தொடங்கிய ரஷ்யா அதன்பின் மின் உற்பத்தி நிலையங்கள், குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என தாக்குதல்களை அதிகரித்துள்ளது. போர் தொடங்கிய நேரத்தில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்ய படைகள் முயற்சி செய்த நிலையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் கடுமையான எதிர்பார்ப்பால் ரஷ்யப்படைகள் அங்கிருந்து பின்வாங்கியுள்ளது. அதனை தொடர்ந்து தலைநகர் கீவ்வில் பல மாதங்களாக அமைதியான சூழல் நிலவி வந்த நிலையில் நேற்று காலை கீவ் நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

கீவ் நகரில் உள்ள பொதுமக்களை இலக்காக வைத்து 80க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்யப்படைகள் ஏவியது. இதில் பாதிக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் உக்ரைன் படைகளால் நடுவழியில் இடை மறித்து அழிக்கப்பட்ட போதிலும் எஞ்சிய ஏவுகணைகள்  கீவ் நகரின் பல பகுதிகளில் பற்றி எரிய வைத்துள்ளது. இந்த சூழலில் ரஷ்ய படைகளின் சரமாரியான ஏவுகணை வீச்சில் கட்டிடங்களும் வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளது. இதனால் நகரில் எங்கும் தீ பிளம்பாக காட்சியளித்துள்ளது. சமீபத்திய மாதங்களில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகவும் பயங்கரமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர் மேலும் 60க்கு அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உக்ரைனிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கிருமிய தீபகற்பத்தையும் ரஷ்யாவையும் இணைக்கும் பாலத்தில் நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு உக்ரைன் தான் காரணம் என ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சாட்டிய நிலையில் சில மணி நேரத்தில் கிவ் நகர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |