Categories
உலக செய்திகள்

ரஷ்யா சென்றடைந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்…!!!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றடைந்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்ற மாநாடு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று  ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். இந்தியா மற்றும் சீனா இடையில் எல்லை பிரச்சனை நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த மாநாட்டில் சீன பாதுகாப்பு துறை மந்திரியும் பங்கேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ரஷ்யா சென்றடைந்துள்ளார். அவரை விமான நிலையத்திற்கு சென்று மேஜர் ஜெனரல் புக்டீவ் யூரி வரவேற்றார். இந்த மூன்று நாள் சுற்றுப் பயணத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி ரஷ்ய ராணுவ மந்திரி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |