உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்து உள்ளனர். ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய ஜி7 நாடுகள் மாநாடு நேற்று ஜெர்மனியிலுள்ள எல்மாவில் நடைபெற்றது.
அதில் பங்கேற்க அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் சென்றார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்யாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய அமெரிக்காவும் இதர ஜி-7 நாடுகள் தடை விதிக்கவுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை வெளியாகும். மேலும் எரிசக்தி அடுத்தபடியாக ரஷ்ய அதிகமாக ஏற்றுமதி செய்யும் பொருள் தங்கம். எனவே அதற்கு தடை விதித்தால் ரஷ்யாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.