நோட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்காக எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்திய ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது, போருக்கு உதவுவது போன்றவை ஐரோப்பிய நாடுகள் விமர்சித்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சரான ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது ஏன் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்குகிறது? இதற்கான அர்த்தம் ரஷ்யா உக்ரேன் போருக்கு ஐரோப்பிய நாடுகள் முதலீடு செய்வதென அர்த்தமாகுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி செய்தியாளரிடம் கூறியதாவது, “அமெரிக்கா இந்தியாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியா ரஷ்ய மீது சர்வதேச அளவில் அழுத்தத்தை தரவேண்டும். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதினுக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடியை கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு இந்தியா உள்பட எல்லா நாடுகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.