ரஷ்ய நாட்டின் மீது போடப்பட்டுள்ள பொருளாதார தடைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வரும் ரஷ்ய நாட்டுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது, இந்த பொருளாதார தடைகள் போதுமானதாக இல்லை எனவும் மேலும் அதிக பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், உக்ரைனின் ராணுவ தொழில்துறை வளாகத்தை தாக்கப் போவதாக கூறிய ரஷ்ய ராணுவ அமைச்சகத்தின் அறிவிப்புக்கு, ஒரு தலைவர் கூட எதிர்வினையாக கூறியதை நான் கேட்கவில்லை என்று கூறினார். இந்நிலையில் ரஷியா மீது பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் மேலும் வலுப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.