Categories
உலக செய்திகள்

“ரஷ்யா மேல கைய வச்சா”… தாறுமாறா ஆகிடும்…. கடுமையாக எச்சரித்த “ஐரோப்பிய நாடு”…. திக்குமுக்காடும் உக்ரேன்….!!

ரஷ்ய விவகாரத்தில் உக்ரேனை அமெரிக்கா தான் போருக்கு இழுத்து விடுகிறது என்று பெலாரசின் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார்.

உக்ரைனிலுள்ள டான்பாஸ் என்ற பகுதியில் ரஷ்யாவுக்கும், அந்நாட்டு படைகளுக்குமிடையே கடந்த 8 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தனது படைகளை உக்ரேன் எல்லையில் குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவின் அதிபரான புடினை பலமுறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஐரோப்பிய நாடான பெலாரஸின் அதிபரான அலெக்சாண்டர் முக்கிய தகவல் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது உக்ரைன் அந்நாட்டிலுள்ள டான்பாஸிற்கு எதிராக போரை தொடுத்தால் ரஷ்யாவுடன் தாங்களும் சேர்ந்து ஒன்றாக பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்ய விவகாரத்தில் உக்ரைனை அமெரிக்காதான் போருக்கு இழுத்து விடுகிறது என்றும் பெலாரஸின் அதிபரான அலெக்சாண்டர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனையடுத்து உக்ரேன் ரஷ்யாவை சீண்டினால் ராக்கெட் தாக்குதல் உட்பட மிகக் கடுமையான விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி உக்ரேன் ரஷ்யாவுடன் போரிட்டால் எரிபொருள் அல்லது மின்சாரம் தங்கள் நாட்டிலிருந்து வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்றும் அலெக்சாண்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |