உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுடனான உறவு சீர் குழைந்துள்ள நிலையில் நோட்டாவின் பொது செயலாளர் மறைமுகமாக முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
உக்ரேன் எல்லை விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவுடனான ரஷ்யாவின் உறவு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.
இந்நிலையில் நோட்டாவின் பொது செயலாளரான ஜென்ஸ் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஐரோப்பா அதன் ஆற்றல் விநியோகங்களை அதிகப்படுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக ஒரே நாட்டை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏனெனில் ரஷ்யா இயற்கை ஆற்றலை ஐரோப்பாவிற்கு வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து “ஐரோப்பாவின் எரிசக்தி” இயற்கை எரிவாயு விநியோகஸ்தாரர்களை சார்ந்து இருப்பதால் அதன் நிலைமை குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.