சென்ற சில வாரங்களாக ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமான பலர் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வருவது குறித்த செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அண்மையில் புடினுக்கு நெருக்கமானவரான Alexander Dugin என்பவரின் மகளான Darya Dugina என்ற இளம்பெண், கார் வெடி குண்டு வாயிலாக கொல்லப்பட்டார். புடின் ஆதரவாளரான ஒருவர் தன் மகளைப் பள்ளியில் இருந்து அழைத்துவரச் செல்லும் போது கார் வெடிகுண்டு வாயிலாக கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து கெர்சன் பகுதியில் புடின் ஆதரவாளரான Vitaly Gura என்பவர் அவரது அலுவலகத்தில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.
Dmitry Savluchenko எனும் அலுவலர் ஒருவர் வெடிகுண்டு வாயிலாக கொல்லப்பட்டுள்ளார். உக்ரைன் தரப்பில் பணிபுரிந்த பிறகு ரஷ்யதரப்பில் இணைந்த Askyar Laishev என்பவரும் கார் வெடிகுண்டு வாயிலாக கொல்லப்பட்டார். அதன்பின் ரஷ்ய ஆதரவாளரான Valery Kuleshov என்பவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் புடினுடைய படைகளை உக்ரைனுக்கு வரவேற்ற மேயர் Vlodymyr Struk என்பவர் கடத்தப்பட்டு மார்பில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆகவே புடினுக்கு நெருக்கமானவர்களும், ஆதரவாளர்களும், உக்ரைன் தரப்பில் இருந்து புடினுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் சிலர் தாக்குதலில் தப்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் அடுத்த குறி புடினுக்குத்தான் என முன்னாள் நேட்டோ தலைவரான Gary Tabach கூறினார். ஒருபக்கம், உக்ரைன் படையெடுப்பை சொதப்பியதால் புடினுக்கு நெருக்கமானவர்களே அவரது தலைக்கு விலை வைத்திருக்கிறார்களாம். மற்றொருபுறம் உக்ரைன் தரப்பில் புடினைக் கொல்ல ஒரு கூட்டம் முயன்று வருகிறது. எனவே 2 பக்கம் இருந்தும் புடினுக்கு ஆபத்து நெருங்குகிறது. இதனிடையில் புடினுக்கு நெருக்கமானவர்களைக் கொல்ல ஸ்லீப்பர் செல்கள் தயாராக இருக்கிறார்களாம். ரஷ்யா நிலையான ஒரு நிர்வாகத்தை உருவாக்க பெரும் சவால்களை எதிர்கொண்டாக வேண்டும் என நிபுணரான Michael Kofman கூறினார்.