Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபருக்கு நெருக்கமான பெண் வெடிகுண்டு விபத்தில் பலி…. உக்ரைன் பெண்மணி காரணமா….? பெரும் பரபரப்பு….!!!!

வெடிகுண்டு விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் அலெக்சாண்டர் டுயூகின் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபலமான எழுத்தாளர் மற்றும் தத்துவியலாளர் ஆவார். இவருடைய மகள் டேரியா டுயூகினா ஒரு பிரபலமான டிவி வர்ணனையாளர் அவார். இவர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தன்னுடைய காரில் திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென கார் வெடித்து டேரியா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் டேரியாவின் தந்தையான அலெக்சாண்டர் ரஷ்ய அதிபர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், வெடிகுண்டு விபத்தில் டேரியா உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், டேரியாவின் மரணத்திற்கு நட்டாலயா என்ற உக்ரைன் பெண்மணி தான் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான ஆதாரங்களை ரஷ்ய உளவுத்துறை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக டேரியாவின் மரணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள புதின், டேரியா நாட்டிற்காக மிகவும் கடுமையாக உழைத்தவர் என்றும் தேசப்பற்று மிக்கவர் என்றும் கூறி ரஷ்யாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான order of courage என்ற விருதை அவருக்கு வழங்கி புதின் கௌரவித்துள்ளார். மேலும் டேரியாவின் கொலைக்கு பின்னால் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண்மணி இருப்பதால் ரஷ்யா பழிக்கு பழி வாங்குமா என்ற அச்சம் தற்போது நிலவுகிறது.

Categories

Tech |