உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. அந்த வரிசையில் ரஷ்யாவின் அதிபர் விளாமிடிர் புதினின் மகள்களான கதேரினா டிகோனோவா மற்றும் மரியா வொரோன்ட்சொவா பயணம் செய்ய தடை, அவர்களின் சொத்துகளை முடக்குதல் உள்ளிட்டவை அடங்கிய பொருளாதார தடையை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
அதேபோல், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லவ்ரோவ் மகளுக்கு எதிராகவும் இதே பொருளாதார தடையை பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரிட்டன் அரசாங்கம் கூறுகையில், ரஷ்யா மீது போர் தொடுத்த நாள் தொடங்கி தற்போது வரை 1600 ரஷ்யர்கள் மற்றும் ரஷ்யாவிற்கு தொடர்புடைய 16 வங்கிகள் மீது பொருளாதார தடையை விதித்துள்ளதாக கூறியுள்ளது.