ஒடிசாவில் ஒருவார இடைவெளியில் அடுத்தடுத்து 2 ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் ஒருவர் ரஷ்ய எம்பியும், அதிபர் புதினை விமர்சித்தவர் எனவும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்தவரும், அந்நாட்டு பணக்கார நாடாளுமன்ற உறுப்பினருமான பவெல் அன்டனவ் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார்.
இந்நிலையில் பவெல் அன்டனவ் தான் தங்கி இருந்த அறையில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.