Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்தவர் மரணம்… வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை… தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!

பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ் என்பவர் ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி கொடையாளராக அறியப்பட்டவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒடிசாவிற்கு சுற்றுலா பயணத்திற்காக நண்பர்களுடன் வந்த போது ராயகடா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் ஓட்டலின் மூன்றாவது தளத்தில் உள்ள ஜன்னல் வழியே கீழே விழுந்த அவர் மரணம் அடைந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸ் சூப்பிரண்ட் விவேகானந்தர் சர்மா கூறியதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை பாவெல் மரணம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து அவரது குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்று அவரது உடலை திங்கட்கிழமை தகனம் செய்து விட்டோம். அதே ராயகடா ஓட்டலில் ஆன்டோவின் சக கட்சி உறுப்பினரான விளாடிமிர் புடானோவ் மரணமடைந்த மூன்று நாட்களுக்குள் பாவெல்லும் மரணம் அடைந்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தவர்களில் இவரும் ஒருவர். இருப்பினும் அந்த whatsapp தகவல் உடனடியாக அழிக்கப்பட்டு விட்டது. ஆன்டோவ் மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அவர் உள் காயம் ஏற்பட்டதில் மரணமடைந்துள்ளதாக அதற்கான காரணம் தெரிவிக்கிறது. ஒருபுறம் சக நண்பர் மரணம் அடைந்த அதிர்ச்சியில் ஆன்டோவ் தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் மற்றொருபுறம் அது தள்ளிவிடப்பட்ட ஒன்றாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் அவர்கள் தங்கி இருந்த ராயகடா ஹோட்டலுக்கு செல்ல இருக்கின்றனர்.

Categories

Tech |