Categories
உலக செய்திகள்

“ரஷ்ய அதிபர் புதின்”… கனடாவில் நுழைய தடை விதித்து மசோதா…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

ரஷ்ய அதிபர் புதினும், அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த 1,000 பேரும் தங்களது நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்யும் மசோதாவை கனடா அரசானது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.

ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உக்ரைன் வழியாக நுழைவதற்கு கனடா தடை விதித்து இருக்கிறது. இதுகுறித்து அந்நாட்டு பொது பாதுகாப்பு துறை மந்திரியான மார்கோ மென்டிசினோ கூறியிருப்பதாவது “உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தொடர் தாக்குதலுக்கு பின் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதின், அவரது அரசு மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த 1,000 பேர் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் புதின் ஆட்சியின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் முக்கியமான ஆதரவாளர்கள் எங்களது நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்வது ரஷ்யாவை அதன் குற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் பல்வேறு வழிகளில் ஒன்றாக இருக்கும்” என மார்கோ மென்டிசினோ கூறினார்.

Categories

Tech |