உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 5 வாரங்களை கடந்துள்ள நிலையில், உக்ரைனின் பல நகரங்கள் உருத்தெரியாமல் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உக்ரைனில் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்திய ஐநா சபையின் முன்னாள் வழக்கறிஞர் கார்லா டெல் பொன்டே ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு எதிராக கைது ஆணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள கார்லா டெல் பொன்டே உக்ரேனிய பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கட்டிடங்கள் மற்றும் கிராமங்கள் அழித்தொழிப்பு போன்ற நடவடிக்கையால் போர்க் குற்றங்கள் நடந்து இருப்பது தெளிவாக தெரிகிறது. இத்தகைய கொடூர தாக்குதலுக்கு காரணமான ரஷ்ய அதிபர் புதின் மீது சர்வதேச கைது ஆணை பிறப்பித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார். அதோடு போரில் ஈடுபட்ட இரண்டு நாடுகள் மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.