ஜெர்மனி மற்றும் ரஷ்யா இணைந்த Nord Stream2 திட்டத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஜெர்மனி ரஷ்யாவுடன் இணைந்து வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில் ரஷ்ய எரிவாயுத்திட்ட ஒப்பந்தத்தை போட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு எரிவாயு கொண்டு வருவதற்காக Nord Stream2 Pipeline என்ற திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா இந்த திட்டத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
Nord Stream2 திட்டம் குறித்து அமெரிக்க மாகாணங்களிலன் செயலர் Antony Blinken கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தத் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் இது அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் தீங்கு விளைவிக்கும் எனவும் கூறினார். மேலும் இது தொடர்பாக ஜெர்மனி பிரதிநிதி ஹெலிகோ மாஷியிடம் கருத்து தெரிவிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜெர்மனி அமெரிக்காவின் எதிர்ப்பை சற்றும் யோசிக்காமல் குழாய்கள் பதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் Nord Stream2 Pipeline திட்டம் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டதால் அது செப்டம்பர் மாதம் முடிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவிற்கு இந்த திட்டம் நஷ்டத்தை ஏற்படுத்த கூடியதாகவும், இயற்கை திரவ எரிவாயு திட்டத்திற்கு போட்டியாக அமையும் என்பதால் அமெரிக்கா இந்த திட்டத்தை கைவிடுமாறு எச்சரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.