கொலம்பியாவில் இருந்து பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட்ட வாழைப் பழங்கள் அடங்கிய ஒரு பார்சலில் டன் கணக்கில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் எல்லை பாதுகாப்பு படையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரித்தானிய எல்லை பாதுகாப்பு படையும் தேசிய குற்றவியல் ஏஜென்சியின் இணைந்து நடத்திய சோதனையில் சுமார் 3.7 டன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த போதைப் பொருட்கள் வாழைப் பழங்கள் அடங்கிய பார்சலுக்குள் மறைத்து வைக்கப்பட்டு பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 302 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு இத்தனை பெரிய அளவிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை என கூறியுள்ளார்.