Categories
உலக செய்திகள்

ரஷ்ய தூதர் மீது சிவப்பு நிற பெயிண்ட் வீசி தாக்குதல்…. வெளியான வீடியோ ஆதாரம்…..!!!!!

2ஆம் உலகபோரின் முடிவில் சென்ற 1945ஆம் வருடம் ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகளுக்கு எதிராக போரிட்ட ரஷ்யா வெற்றியடைந்தது.  இப்போரில் ஜெர்மனியானது வீழ்த்தப்பட்டது. இதை நினைவுகூரும் அடிப்படையில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் மே 9 ஆம் தேதி ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள சூழ்நிலையிலும், இந்த வருடம் வெற்றிநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் நேற்று ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்று பேசினார். இதேபோல் போலந்து நாட்டிலுள்ள வார்சா நகரிலும் வெற்றி தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அப்போது போரில் இறந்த சோவியத் யூனியன் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவற்றில் பங்கேற்பதற்காக போலந்து நாட்டுக்கான ரஷ்ய தூதர் செர்கே ஆண்ட்ரீவ் சென்று உள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போரால் எதுவும் அறியாத மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

இருப்பினும் இருநாடுகளும் போரை நிறுத்தவில்லை. இந்த சூழ்நிலையில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடிப்படையில் போலந்திலுள்ள ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக ரஷ்ய தூதர் ஆண்ட்ரீவ் மீது போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் சிவப்பு வர்ண பெயிண்ட்டை அவரது முகத்தில் வீசினார். இருந்தாலும் பொறுமை காத்த தூதர், பின் முகத்தில் வழிந்த பெயிண்டை துடைத்து விட்டார். ரஷியதூதர் மற்றும் அவருடன் வந்த மற்ற உறுப்பினர்களையும் வார்சாவிலுள்ள சோவியத் வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கவிடாமல் தடுப்பதில் போராட்டக்காரர்கள் வெற்றி பெற்று விட்டனர் என்று இன்டிபென்டண்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://twitter.com/RadioGenova/status/1523616408843603968?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1523616408843603968%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FWorld%2F2022%2F05%2F09210252%2FVictory-Day-event-in-Poland-Paint-attack-on-Russian.vpf

Categories

Tech |