ரஷ்யாவின் 99 மில்லியன் டாலர் மதிப்புடைய 70 மீட்டர் நீளமான சொகுசு கப்பலை ஸ்பெயின் கடற்படை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கின்றனர். viktor vekselberg என்ற ரஷ்ய தொழிலதிபருக்கு சொந்தமான இந்த கப்பல் உக்ரைன் போருக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்காவின் சார்பில் கைப்பற்றப்பட்டு இருந்தது.
மேலும் கப்பலில் இருந்த தரவு ஆவணங்கள் மற்றும் கருவிகள் கைப்பற்றப்பட்டதாக ஸ்பெயின் நாட்டு காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்க வங்கி கடன் மோசடி பண பரிவர்த்தனை மீறல் மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டது என கப்பலின் உரிமையாளர் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாக ஸ்பெயின் மீது நீதித்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.