ரஷ்ய படைகளால் உக்ரைனில் பெற்றோருடன் கடத்தி கொலை செய்யப்பட்ட கால்பந்து வீரரின் கடைசி பதிவை அவருடைய சகோதரி பகிர்ந்துள்ளார்.
ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 40 நாட்களுக்கும் மேலாக கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் குடும்பத்துடன் கடத்தி செல்லப்பட்ட பெண் மேயர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். தற்போது அந்த பெண் மேயரின் மகன் Alexander Sukhenko (வயது 25)-ன் கடைசி பதிவை அவருடைய சகோதரி பகிர்ந்துள்ளார்.
அதாவது Alexander Sukhenko பிராந்திய பாதுகாப்பு படையில் இணைந்து கொண்டு அப்பாவி மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய படைகளால் துப்பாக்கி முனையில் தாயாரும், நகர மேயருமான ஓல்கா மற்றும் தந்தையுடன் கடத்தப்பட்ட Alexander Sukhenko தனது சகோதரிக்கு இறுதியாக குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “அம்மாவை அவர்கள் கடத்திச் சென்றுள்ளார்கள். ஆனால் நாங்கள் தற்போது பத்திரமாக உள்ளோம். இனிமேல் மொபைல் பயன்படுத்த முடியாமல் போகலாம்” என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்றும், பெற்றோருடன் கொலை செய்யப்பட்ட நிலையில் காட்டுப்பகுதியில் இருந்து சடலங்களை மீட்டுள்ளதாக Alexander Sukhenko-ன் சகோதரி கூறியுள்ளார்.