உக்ரைன் உடனான போரில் ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை தூண்டக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் ரஷ்யப்படைகள் அணு ஆயுதப் பயிற்சிகளை மேற்கொள்வதை புதின் பார்வையிட்டுள்ளார். இந்த நிலையில் ரஷ்ய ராணுவ படையினரால் சில காலமாக திட்டமிடப்பட்டிருந்த அணு ஆயுதப் பயிற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் நாட்டில் அணுசக்தி படைகள் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் பல பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த பயிற்சியில் யார்ஸ் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு கண்டமிட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவப்பட்டுள்ளது மற்றும் டீயு 95 முலோபாய குண்டு வீச்சு விமானங்கள் மூலோபாய பயிற்சி இலக்குகளை நோக்கி செலுத்தியுள்ளது.
இதனை ரஷ்ய ஜனாதிபதி புடின் தனது அலுவலகத்தில் இருந்து வீடியோ இணைப்பு மூலம் மேற்பார்வையிட்டுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி தெரிவித்த கருத்தில் ஜனாதிபதி புதின் இந்த பயிற்சியை மேற்பார்வையிட்டுள்ளார். மேலும் எதிரிகளின் அணுசக்தி தாக்குதலுக்கு பதிலடியாக ஒரு பெரிய அணுசக்தி தாக்குதலை வழங்குவதற்கான பயிற்சி நடத்துவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் இந்த அணு ஆயுத பயிற்சியானது ரஷ்யாவின் பிரதேசத்தின் மீதான தாக்குதல்களை தடுக்க கிடைக்கும் அனைத்து வழிகளையும் ரஷ்யா பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக புதின் எச்சரித்ததை தொடர்ந்து அரங்கேறி உள்ளது.