உக்ரேனின் கார்கிவ் நகரிலுள்ள விமான நிலையத்துக்கு அருகில் குடியிருப்பு பகுதியில் ரஷ்ய படைகளின் குண்டுவீச்சுத் தாக்குதலில், பள்ளி ஒன்றில் தீப்பற்றியதோடு அருகில் இருந்த கட்டிடங்களும் சேதமடைந்தது. கார்கிவ் விமான நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிற்குள்ளாக இந்த தாக்குதலானது நேர்ந்துள்ளது.
இதனால் அங்கிருந்த பள்ளி கட்டிடத்தில் தீப்பற்றிய நிலையில், அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவி விட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தினர். இந்த விபத்து காரணமாக 2 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.