ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஸ்னைப்பர் ஒருவரை அவரது சக ரஷ்ய வீரர்கள் கைவிட்டுச் சென்ற விடயம் நினைவு இருக்கலாம். பலத்த காயமடைந்த நிலையில் உக்ரைன் வீரர்களிடம் சிக்கிய Irina Starikova (41) என்ற அந்த பெண் ஸ்னைப்பர் இப்போது எப்படியிருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் அவருக்குப் போட்டியாக உக்ரைன் தரப்பில் களமிறங்கி இருகிறார் ஒரு பெண் ஸ்னைப்பர். “Charcoal” என்ற புனைபெயரில் அழைக்கப்படும் அப்பெண் 2017 ஆம் வருடம் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய பிரிவினைவாதிகளுக்கு எதிராக போராடியவர் ஆவார்.
இந்த வருடம் ஜனவரியில் அவர் இராணுவத்தில் இருந்து விடைபெற்ற நிலையில், இப்போது மீண்டும் ரஷ்யப்படைகளை காலி செய்வதற்காக இராணுவத்திற்கு திரும்பியிருக்கிறார். இந்த ரஷ்ய படைகள் மனிதர்களே அல்ல, அவர்கள் அரக்கர்கள், ஒருவர் விடாமல் அவர்களைக் காலி செய்வோம் வாருங்கள் என்று அவர் தனது சக வீரர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். அவரை ஹீரோவாகக்கொண்டாடும் உக்ரைனியர்கள் அவரை மிகவும் பிரபலமான பெண் ஸ்னைப்பரான Lyudmila Pavlichenko என்ற பெண்ணுடன் ஒப்பிடுகிறார்கள். இதுவரையிலும் பெண் ஸ்னைப்பர்களாக இருந்தவர்களிலேயே மிகவும் வெற்றிகரமான ஸ்னைப்பர் Lyudmila தான். 2ஆம் உலகப் போரின்போது நாஸிக்களில் 309 பேரைக் கொன்றதால் அவர் Lady Death என அழைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது