Categories
உலக செய்திகள்

ரஷ்ய பீரங்கியை திருடிச்செல்லும் உக்ரைன் விவசாயி…. வைரலாக பரவும் வீடியோ…!!!

ரஷ்ய படைகள் வைத்திருந்த பீரங்கியை உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு விவசாயி திருடிச் செல்லும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றோடு ஏழாவது நாள் ஆகிறது. அங்கு ராணுவ தளங்களை நோக்கி ரஷ்யா கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, தங்கள் நாட்டை காப்பதற்காக உக்ரைன் நாட்டு மக்களும் போர் களத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அவர்கள், தெருக்களில் ரஷ்ய படைகளை எதிர்த்து மோதி வருகிறார்கள். இந்நிலையில் ரஷ்ய பீரங்கியை, உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு விவசாயி தன் டிராக்டரில் சேர்த்துக்கொண்டு திருடி சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில், ஒரு விவசாயி, ரஷ்யாவின் எம்டிஎல்வி என்ற பீரங்கியை டிராக்டரில் சேர்த்துக்கொண்டு திருடிச் செல்கிறார்.

Categories

Tech |