உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பணவீக்கம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பணவீக்கத்தை சமாளிக்கும் பொருட்டு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் அமெரிக்கா மட்டுமன்றி சர்வதேச அளவிலும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறாக அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் பட்சத்தில் வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் ஆகியவற்றிற்கான இஎம்ஐ விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் இஎம்ஐ செலுத்தும் பல குடும்பங்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளன.
Categories