உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தனி விமானம் மூலம் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டனர். இருப்பினும் பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க இந்திய அரசு விமானத்தை அனுப்பி இருந்தது, ஆனால் உக்ரைன் வான் பகுதி மூடப்பட்டு விட்டதால் அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க முடியாமல் அனுப்பப்பட்ட விமானம் டெல்லி திரும்பியது. உக்ரைனில் தற்போது 18 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியர்களை உரிய நேரத்தில் மீட்காதற்கான காரணம் என்ன என காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முரளிதரன் திருச்சூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்., அதில் அவர் கூறியதாவது, “இந்தியர்கள் பீதியடைய வேண்டாம். மத்திய அரசு எப்போதும் உங்களுடன் தான் இருக்கிறது. உக்ரைன் வான் பகுதி மூடப்பட்டு விட்டதால் மீட்பு பணியில் சற்று தாமதம் நிலவி வருகிறது. மாற்று வழியை நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.!” இவ்வாறு அவர் கூறினார்.